புகை

ஒரு மழை நாளில்
உதட்டில் பொருத்திய
முதல் சிகரெட்டோடு
உள்ளே பரவிய நிக்கோடின்
துகள்கள் மூளையின் செல்களை
கலைத்துப் போட்டிருந்தன...!

பற்றியிழுக்கையில்
பரவசமாய் உள்ளே சென்ற
புகையினூடே உண்டான
முதல் பரவசத்தில்...
முரண்கள் பட்டுப் போயிருந்தன!

உள்ளே பரவி சூடான
நினைவுகளை தெளித்து விட்டு
வெளியே பெய்த மழையை
வேடிக்கையாய் பார்த்து
சிரித்தது வெள்ளை சிகரெட்...!

அழுந்த புகைத்தேனா
இல்லை ஆழமாய் சுகித்தேனா
என்றறியாமல் தடுமாறிய...
வேளையில் எங்கிருந்து...
எட்டிப் பார்த்தது உன் நினைவுகள்..?

உள்ளிழுத்து வெளிவிட்டு
வெளிவிட்டு உள்ளிழுத்து
மொத்தமாய் செத்துப் போயிருந்த
நிக்கோடின் குச்சியின்
மிச்சத்தில் புகைத்தலின்றி
மிகைத்து கிடந்த உன் நினைவுகளுடன்
தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!

எழுதியவர் : Dheva .S (9-Aug-14, 11:13 pm)
Tanglish : pukai
பார்வை : 54

மேலே