STRESS MANAGEMENT~நெருக்கடியை சமாளிப்பது எப்படி1

படித்ததில்பிடித்தது::

stress என்றால் என்ன? அதற்கு பொருத்தமான தமிழ் வார்த்தை என்ன?என்று தேடி தவித்து கொண்டு இருக்கும் பொது உதவிக்கு ஓடி வந்தார் வள்ளுவர்இடுக்கண் வருங்கால் நகுக என்று நமட்டு சிரிப்போடு சொன்னார் அவர். உடனே கவிஞரோ அட போயா, பாம்பு வந்து கடிக்கையில்,பாழும் உயிர் துடிக்கையில் யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு என்று சுய அனுபவத்தை புலம்பினார்.

stress என்றால் distress என்று சொல்லலாம்.

நிகழ்ந்த,நிகழ்கின்ற,அல்லதுநிகழப் போகின்ற ஒரு நிகழ்வோ சம்பவமோ நமது உடல்,உயிர்,மற்றும் மனதுக்கு துயரையோ, நெருக்கடியையோ கொடுத்தால் அதை இருக்கண்,இடும்பை என்று சொல்லலாம்.எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தாலும் சரி அல்லது எதிர்பாராத ஏமாற்றம் அடைந்தாலும் சரி அல்லது எதிர்பாராத ஏமாற்றம் வந்தாலும் சரி மனம் நெருக்கடிக்கு ஆளாகிறது.ஆனால் நடைமுறையில் வாழ்வின்எல்லா மட்டங்களில் உள்ள எல்லா மனிதருக்கும் நெருக்கடி என்பது நொடிக்கு நொடி அடிக்கடி சந்திக்க கூடிய,சந்திக்க வேண்டிய ஒரு இயல்பான நிகழ்வாகும்.

துயரம்,துன்பம் வரும் போது துக்கமும்,சோர்வும் வருவதுதானே இயல்பு.அதனால் என்ன தவறு?இடுக்கண் வரும் போது சிரிக்க முடியுமா?யாராலும் முடியாது என்பது இயல்பு.பிறகு ஏன் வள்ளுவர் அப்படி சொன்னார்?துயரம் வரும் போதுசிரித்தால் எல்லாரும் பைத்யம் என்றல்லவா சொல்வார்கள்?ஆனால் நன்றாக சிந்தித்து பார்ப்போம் சிரிக்கவா சொல்கிறார் நுணுக்கமாக அழாதே தைர்யமாக இரு அப்போது தான் கலங்காமல் அதை எதிர்த்து போராடி வெற்றி காணமுடியும் என்றல்லவா சொல்ல பார்க்கிறார்.

நாம் வழக்கம் போல துன்பம் வரும் பொது அழகிறோம்,சோர்வடைகிறோம்.தூசு போல வெள்ளம் நம்மை இழுத்து கொள்ளும்.எதிர்ப்பும் உறுதியும்இல்லை என்றல் இன்னும் சுலபமாக வீழ்வோம் தூசும் துரும்பும் போல.

ஆகவே துன்பம் என்பது வலி போலஇயல்பாக வேதனையும் சோர்வும்தரும் அது எதற்காக?அப்போது தான் நாம் அந்த செயலை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்ற நடத்தை உருவாவதற்காக.ஆனால் நடைமுறையில் மனிதனில்சமூக பரிணாம வளர்ச்சியில் இது பல மாற்றங்களை அடைந்தது

.உணவு,உறவு,உறக்கம் மட்டும் மிருகத்துக்கு போதுமானது ஆனால் மனிதனான சமூக மிருகத்துக்கு அதை தாண்டி பணம்,பதவி,புகழ் என்றபல பகட்டான பாக்கள் தேவைப்பட ஆரம்பித்தது.எனவே அவனுடைய தேவையின் எல்லைகள் விரிவடைய உணவு,உறவு,உறக்கத்தை கூட துறக்கவும் தியாகம் செய்யும் உயிரையே கூட விருப்பத்துடன் பலியிடவும் தன்னை தயார்படுத்தி கொள்ள வேண்டிவந்தது.

இந்த கட்டத்தில் விரக்தியை,தோல்வியை,துயரை,னெருக்கடியை தாங்கி,சமாளித்து, நின்று நிலைத்து எதிர்த்து போராட வேண்டிவந்தது.அப்போதுதான் தகுதியுள்ளவரேஉயிர் வாழ்வார் புகழ்பெறுவார் என்ற தத்துவம் வலுபெற்றது.

எவரொருவர் நெருக்கடியை சுலபமாக எதிர் கொள்ளும் மன உறுதி உடையவரோ அவருக்கு எல்லா வெற்றிகளும் என்பது நடைமுறையில் நிரூபிக்கபட்டது.எனவே தான் இடுக்கண் வருங்கால் நகுக என்ற தத்துவம் போதிக்கபட்டது.அதுவாழ்வில் வெற்றி பெற அவசியமான அத்யாவசயமான அடிப்படை கொள்கையாக அறிவுறுத்தப்பட்டது.இதை நம் வாழ்வியல் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பார்ப்போம்.

ஒவ்வொரு வயதின் பயணத்திலும்மனிதன் நேர்கொள்ள வேண்டிய நெருக்கடிகள்தான் எத்தனை.

20 வயதுக்குள்ளாக பெற்றோரில் யாராவது ஒருவர் குறிப்பாக தந்தை பிரியும் போதோ,மரணமடையும் போது நிச்சயமாக ஒரு பெரும் நெருக்கடி உருவாகிறது.சாதராணமாக எல்லாகுழந்தைகளும் இந்த துயரினால்உடைந்துநொறுங்கி,படிப்பில் ,பொருளாதாரம்,வேலை,சுறுசுறுப்பு,உற்சாகம் போன்ற பல செயல்களில் பின் தங்கி இருப்பதை நடைமுறையில்பார்க்கிறோம்.ஆனால் இந்த போராட்டமான வாழ்வினில் வெற்றி பெற்றவர்களே இன்று உலகில் முன்னணியில் வாழ்கின்றனர்.எனவே நெருக்கடிகளை சமாளிக்கஅதை வருமுன்னரே காக்க அதை பற்றிய முழமையான விழிப்புணர்வும் போராடக்கூடிய முன் பயிற்சியும் மிக அவசியமாகிறது.

வாழ்வின் நெருக்கடிகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

1) தனிப்பட்ட மனிதனுக்கேசொந்தமான பிரச்சனைகள்.

2)நட்பு,உறவு,குடும்பம் போன்ற நெருங்கிய மனிதரால் வரும் பிரச்சனைகள்.

3) வேலை,அயலார்,தொழில்,சமூகம்,அதிகாரிகளால் வரும் பிரச்சனைகள் இதை personal/interpersonal/occupational/socialstresses என்று பகுக்கலாம்.

நெருக்கடிகள் ஒன்று உடல் ந‌லம் மற்றது மன நலத்தை பாதிக்கும் அல்லது இரண்டையும் பாதிக்கும்.

நேரம்,பொருளாதாரம் வலி,துன்பம்,தோல்வி,அவமானம்,இழப்பு போன்ற பல்வேறு வகையான விளைவுகள் நெருக்கடியை தோற்றுவிக்கின்றன.இதை வாழ்வின் நெருக்கடியை தரக்கூடிய துன்ப இயல் சம்பவங்கள் என பட்டியலிட்டனர்.அதை எந்த நிகழ்வு மிக துயரமானது என மதிப்பெண் போட்டு வரிசையும்படுத்தினர்.குறைந்த பட்சம் 50 முதல் அதிகபட்சம் 100 வரைஉள்ள இந்த நிகழ்வுகளின் பட்டியல் உலகில் உள்ள எல்லா வயதினருக்கும் ஆண்கள் பெண்களுக்கும் பொருந்தும்.அறிவியல் ஆன்மீகம்,இலக்கியம்,தத்துவம்,மனோத்துவம் போன்ற அறிவுகளில் தெளிவான ஈடுபாடுஉள்வர்களுக்கு அவர்களது சொந்த வாழ்வில் துயரம் வருவதற்கு முன்பாகவே இந்த நெருக்கடிகளை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது.அதை ஏற்று கொள்லும் மனபக்குவம் உள்ளவர்களுக்கு நெருக்கடிகள் குறைந்த பட்ச துன்பமே தருகிறது.அதுமட்டுமல்ல மனதளவில் நெருக்கடிகளை சமாளிக்க கூடிய முன்னறிவும் மன நல பயிற்சிகளும் அவர்களுக்கு படகு போல உதவியாய் இருக்கின்றன.பொறுமையாக அமைதியாக இருந்துநெருக்கடி தீறும் என்ற நம்பிக்கையுடன் அதை எதிர்த்து போராடி வெல்கிறார்கள்.பல நேரங்களில் தெளிவாக தவிக்காமல் தளராமல் உறுதியாக இருந்தால் கொத்த வந்த பாம்பு கூட திரும்பி போகிறது கொதித்து வந்த வெள்ளமும்நெருப்பும் கூட த‌ணிந்து போகிறது.

எழுதியவர் : சதீஷ் (14-Aug-14, 11:52 am)
பார்வை : 112

சிறந்த கவிதைகள்

மேலே