தேடல் -ராகி

தேடல் #ராகி#

கார் மேகத்தில்
செங்கதிரனை தேடுங்கள்
தென்றலாய் நுழைந்து

மழைத்துளியிலே
முத்தை தேடுங்கள்
சிற்பியை உடைத்து

வெற்று நிலத்தில்
இளங்கதிரை தேடுங்கள்
விதையை முளைத்து

கருங் கல்லிலே
வைரத்தை தேடுங்கள்
கடப்பாரையால் உடைத்து

தேட தேட
தேய்பிறை வளரும்
பௌர்ணமியாய்

தோல்வி அடைந்த இடத்திலே
வெற்றியை தேடுங்கள்
தோல்வியின் காரணம் அறிந்து

உழைப்பிலே
ஊதியத்தை தேடுங்கள்
வியர்வை துளிகளால்

அமைதியை தேடுபவர்களே
பணத்தை தேடாமல்
மனத்தை தேடுங்கள்

அதர்மத்தில்
தர்மத்தை தேடு
அகிம்சை வாதத்தால்

கோபத்திலே
நிதானம் தேடு
பொறுமையை உணர்த்துவதாக

பொய்மையில்
வாய்மை தேடு
உண்மை பேசுவதால்

மதவாதத்தில்
சம் மதம் தேடு
மனி மதம் உணர்த்துவதால்

துன்பத்திலே
இன்பம் தேடு
பழகிபோனதால்

தொலைத்த இடத்தில் தேடமால்
நினைத்த இடத்தில் தேடினால்
தேடல் எப்படி வெற்றி அடையும்
தொலைத்ததை தேட
தொலைத்த இடத்தை தேடுங்கள்

தேடலே வாழ்க்கை தேவை
தேவையானவற்றை
தேடி தேருங்கள்
தேவையில்லாவற்றை அழித்து வாருங்கள்

எழுதியவர் : கிருஷ்னா (16-Aug-14, 5:40 pm)
Tanglish : thedal
பார்வை : 99

மேலே