வாழ்க்கை ஓடம்
என் கண்ணில்
வடியும் கண்ணீரும்
பெருக்கெடுத்து ஓடையாய்
செல்கிறது இன்று
நீ என்னிடம்
கடந்து வர
காதல் என்னும் ஓடம்
உனக்காக கரையில்
காத்திருக்க
நீ மட்டும் தயங்குவது
ஏனோ?????
என் கண்ணீரில்
கடந்து வர
மனம் இல்லையா
இல்லை
என்னிடம் வர
மனம் இல்லையா???....
உன் மெளனத்தை
எப்பொழுது உடைப்பாய்???
என்னிடம் எப்பொழுது
உரைப்பாய்??????