விழியோரம் வீணா காதல் சொல்லி
விழியோரம் வீணா காதல் சொல்லி
வழியோரம் வீணா போனவளே
வாலிபம் வீணோ தானa
வாடாத ரோஜா நீயோ
வாசமும் இல்லைதானா
காதலும் கல்லே தானா
கண்டவிழி பொய்யே தானா
காம்பில்லா பூவேதானா
காளைக்கு வண்டி நீயா
போறவழி சொல்லு சும்மா.
கண்ணோரம் காதல் வாணா
என்னோட விளையாட வேணா
நானென்ன விளையாத பயிரா
நீயென்ன நினைச்சாலும் தப்பா
தாயத்தை உடுட்டி விட்டா
காயத்தை கட்டி விட்டா
மாயத்தை செய்து விட்டா
மாயமாகிப் போயும் விட்டா
நாளெல்லாம் தவிக்குது மனசு
நாயாகி அலையுது மனது
நியாயம் சொல்லு நீயும் பிள்ளே
அநியாயம் அங்கே இல்லே
அம்புலியை தூது விட்டேன்
கரும்புலியா மாறிப்போனேன்
உறைபனியா உன் மனசு
கரைகின்ற காலம் புதுசு
காணத கனவும் கண்டேன்
கண்மணியே உன்னைப் பிரிந்தேன்.
ஓடி எங்கே ஒழிந்து விடுவாய்
ஒரு அன்பு மறைக்கலாமோ