4 + 2 =ஆறு ஆண்டு ஹாஸ்டல் வாசம் அனுப்பிய தசரதன்
எனக்கும்
என் மனைவிக்கும்...
மகனால்
வந்த சண்டைகள்!
மொத்தம்
முடிவுக்கு வந்தன.!!
அவனை
வெளியூர் கல்லூரி
விடுதி ஒன்றில்
விட்டுவந்த போது....
ரயில் புறப்படும்
நேரத்தில்
அவன் அம்மாவிடம்
சொன்னான்.!
"அப்பாகிட்ட
சண்டை போடதம்மா.!!"
என் மனைவி
எனை பார்த்து சிரிக்க.!
நான் முகம் திருப்பி
கண்கள் துடைத்தேன்.