கொடும்பகையை வெல்வாயே
பொய்யுரையும் புகழுரையும்
போதைதரும் மாத்திரைகள்
மெய்ம்மறந்து ஆடாதே!
மதிகெட்டுப் போகாதே!
பதவிக்காய் வாலாட்டிப்
பல்லிளித்து வருங்கூட்டம்
உளமார உதவிசெய்ய
ஒருபோதும் வரமாட்டார்!
பசப்புச்சொல் இனித்திடுமே!
பரவசத்தில் ஆழ்த்திடுமே!
பதமாகப் பேசிப்பேசிப்
படுகுழியில் வீழ்த்திடுமே!
குவிகின்ற கரங்களிலே
குறுவாளும் ஒளிந்திருக்கும்
பகைமுடிக்க நாள்பார்த்து
நகைமுகமும் காத்திருக்கும்
அனுபவித்து உணர்ந்தவர்கள்
அறிவுறுத்தும் உண்மையிது!
கவனத்தில் கொள்வாயே!
கொடும்பகையை வெல்வாயே!

