குழலோன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  குழலோன்
இடம்:  சிங்கப்பூர்
பிறந்த தேதி :  30-Aug-1960
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Aug-2012
பார்த்தவர்கள்:  384
புள்ளி:  76

என்னைப் பற்றி...

சொல்வதற்கு அதிகமில்லை; உதட்டில் மட்டுமன்றி, உள்ளத்திலும் தமிழ் உடையோன்.

என் படைப்புகள்
குழலோன் செய்திகள்
குழலோன் - குழலோன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2017 8:30 am

விளக்கைத் தேடும் விட்டிலின் வாழ்வு
விளக்கிலே முடிவது போல - குடிப்
பழக்கத்தில் மூழ்கும் மனிதனின் நிலையும்
போதைக்கு அடிமை மறவாதே!

கலையிற் சிறந்த நல்லோர் வாழ்வும்
தடம்மாறிப் போனது குடியாலே - அவர்
தனைமறந்து தரமிழந்து தடுமாறி வீழ்ந்ததும்
தள்ளாட வைக்கும் மதுவாலே!

மலையளவு செல்வமும் மங்காத பெரும்புகழும்
மதுவினால் மாறிடும் நொடிப்பொழுதில் - கேட்டை
விலைகொடுத்து வாங்கிடும் கெடுமதி வாழ்வினில்
வேதனையைச் சேர்த்திடும் உணர்மனமே!

குணநலம் போற்றும் சான்றோர் பார்வையில்
குடிமகனைப் போலோர் அற்பனில்லை! - நல்ல
மதிநலன் கொண்டோர் மதுவின் பாதையில்
மறந்தும் செல்லத் துணிவதில்லை!

மேலும்

வாழ்த்துரைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி நட்பே! 12-Jul-2017 2:52 pm
மதுவில் மடிந்து போகிறது மானுட குணம்... வளம்மிகு வரிகள் கருத்தோடு நிறைந்துளது. மனம் திறந்த வாழ்த்துக்கள்... 12-Jul-2017 2:42 pm
"""கலையிற் சிறந்த நல்லோர் வாழ்வும் தடம்மாறிப் போனது குடியாலே""... .. உண்மை தான் நட்பே...... 12-Jul-2017 1:22 pm
குழலோன் - குழலோன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2017 12:06 pm

செயல்பாடு - செயற்பாடு
இவற்றுள் எது சரியான வழக்கு?
தமிழ் இலக்கணம் அறிந்தவர் தெளிவுபடுத்தவும்.

மேலும்

அடிப்படையில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தொல்காப்பியம் என்பது எழுத்திலக்கணத்திற்கு உருவாக்கப்பட்ட இலக்கணம். அதில் வரையறுக்கப்படும் இலக்கண வரம்புகள் எழுத்து வழக்கை நெறிப்படுத்துவதற்கே. உலக வழக்கான, பேச்சுத்தமிழை இலக்கண வழக்கோடு பொருத்திப்பார்க்கக்கூடாது. எழுத்தில் உள்ள 'காற்று' என்பது, பேச்சில் 'காத்து' ஆகிறது. அது முயற்சிச் சிக்கனத்தால் ஏற்பட்டது. இலக்கண வரம்பு மீறல் பேச்சு வழக்கில் இயல்பானதொன்று. வந்துகொண்டிருந்தான் என்று எழுதும் நாம், பேசும்போது, 'வந்துகிட்டிருக்கான்' என்கிறோம். அதை இலக்கண வழுவமைதி என்று சொல்லக்கூடாது. அறியாமையால் நாம் செய்யும் தவறுகளுக்கு எல்லையே இல்லை! புற்றரை என்பதை புற்தரை என்றும் , முட்செடியை முள்செடி என்றும் எழுதி அதற்கு அமைதி சொல்லத் தொடங்கிவிட்டோம். பிழைநீக்கி நல்ல தமிழில் எழுதப் பெருமுயற்சி தேவையில்லை. இலக்கணத்தை முறையாகப் பயின்றாலே போதும். தமிழ் அறிந்த நல்லோர் அதற்கு வழிகாட்டி உதவுதல் நன்று. அன்புடன். 19-Jul-2017 10:24 am
எழுத்திலும் பேச்சிலும் அவள் அங்கயற் கண்ணியே ! இல்லையா -----என்று வாசிக்கவும் 17-Jul-2017 9:18 am
வயல் +காடு = வயற்காடு கொச்சை யில் வயக்காடு ஆனது புயல் +காற்று =புயற்காற்று முயல் + கொம்பு =முயற் கொம்பு கயல் +கண்ணி = கயற்கண்ணி அம் எனும் அடைமொழி சேர்த்தால் அம் + கயல் +கண்ணி =அங்கயற் கண்ணி அம் கயல் கண்ணி என்று எழுதுகிறோமா ? பேச்சில் சொல்கிறோமா ? இல்லை . எழுத்திலும் பேச்சிலும் அவள் அங்கயற் கண்ணியே ! இல்லை . தொல்காப்பியன் இலக்கணமும் சங்கத் தமிழ் இலக்கியமும் ஒரு சேர வளர்க்கும் தென் மதுரை செந்தமிழ்ச் செல்வி அல்லவோ அவள் ! 17-Jul-2017 9:15 am
அருமை கற்றார் என்ற சொல்லுக்கு கல் தான் மூலம் கற்றார் கல்லாதார் என்கிறோம் வேறு வழியில் கற்றவர் கற்காதவர் என்றும் சொல்கிறோம் கல்பனா என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்தன கற்பனா கற்பனை என்ற சொற்கள் அது ஒரே சொல் கல்பனா கல்பனை என்று சொல்லலாமே ! 17-Jul-2017 8:48 am
குழலோன் - Gokul அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2017 1:57 am

௧)அங்கத்தினர்-
௨)அர்த்தம்
௩)அலங்காரம்
௪)ஆரம்பம்
௫)விஞ்ஞானம்
௬)தீபம்
௭)கும்பாபிக்ஷேகம்
௮)சாவி
௯)சரித்திரம்
௧௦)சபதம்
௧௧)சாதம்
௧௨)பௌத்திரி
இவை அனைத்திற்கும் பொருத்தமான தமிழ் சொற்கள் என்ன ?

மேலும்

சபதம் என்பதற்குத் தமிழில் வஞ்சினம் அல்லது சூளுரை என்பனவற்றைக் கொள்ளலாம். ஆணை என்பது பொருந்தாது. 12-Jul-2017 12:12 pm
௧.உறுப்பினர், ௨.பொருள். ௩.ஒப்பனை, ௪.துவக்கம், ௫. அறிவியல், ௬.விளக்கு, ௭. குடமுழுக்கு, ௮. திறவுகோல், ௯. வரலாறு, ௧௦. சூளுரை, ௧௧. சோறு, ௧௨. பெயர்த்தி. 08-Jul-2017 1:20 pm
பௌத்திரி - புத்திரி - மகள் ! 06-Jul-2017 12:45 am
அப்படியா!! நன்று. 03-Jul-2017 10:10 am
குழலோன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
12-Jul-2017 12:06 pm

செயல்பாடு - செயற்பாடு
இவற்றுள் எது சரியான வழக்கு?
தமிழ் இலக்கணம் அறிந்தவர் தெளிவுபடுத்தவும்.

மேலும்

அடிப்படையில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தொல்காப்பியம் என்பது எழுத்திலக்கணத்திற்கு உருவாக்கப்பட்ட இலக்கணம். அதில் வரையறுக்கப்படும் இலக்கண வரம்புகள் எழுத்து வழக்கை நெறிப்படுத்துவதற்கே. உலக வழக்கான, பேச்சுத்தமிழை இலக்கண வழக்கோடு பொருத்திப்பார்க்கக்கூடாது. எழுத்தில் உள்ள 'காற்று' என்பது, பேச்சில் 'காத்து' ஆகிறது. அது முயற்சிச் சிக்கனத்தால் ஏற்பட்டது. இலக்கண வரம்பு மீறல் பேச்சு வழக்கில் இயல்பானதொன்று. வந்துகொண்டிருந்தான் என்று எழுதும் நாம், பேசும்போது, 'வந்துகிட்டிருக்கான்' என்கிறோம். அதை இலக்கண வழுவமைதி என்று சொல்லக்கூடாது. அறியாமையால் நாம் செய்யும் தவறுகளுக்கு எல்லையே இல்லை! புற்றரை என்பதை புற்தரை என்றும் , முட்செடியை முள்செடி என்றும் எழுதி அதற்கு அமைதி சொல்லத் தொடங்கிவிட்டோம். பிழைநீக்கி நல்ல தமிழில் எழுதப் பெருமுயற்சி தேவையில்லை. இலக்கணத்தை முறையாகப் பயின்றாலே போதும். தமிழ் அறிந்த நல்லோர் அதற்கு வழிகாட்டி உதவுதல் நன்று. அன்புடன். 19-Jul-2017 10:24 am
எழுத்திலும் பேச்சிலும் அவள் அங்கயற் கண்ணியே ! இல்லையா -----என்று வாசிக்கவும் 17-Jul-2017 9:18 am
வயல் +காடு = வயற்காடு கொச்சை யில் வயக்காடு ஆனது புயல் +காற்று =புயற்காற்று முயல் + கொம்பு =முயற் கொம்பு கயல் +கண்ணி = கயற்கண்ணி அம் எனும் அடைமொழி சேர்த்தால் அம் + கயல் +கண்ணி =அங்கயற் கண்ணி அம் கயல் கண்ணி என்று எழுதுகிறோமா ? பேச்சில் சொல்கிறோமா ? இல்லை . எழுத்திலும் பேச்சிலும் அவள் அங்கயற் கண்ணியே ! இல்லை . தொல்காப்பியன் இலக்கணமும் சங்கத் தமிழ் இலக்கியமும் ஒரு சேர வளர்க்கும் தென் மதுரை செந்தமிழ்ச் செல்வி அல்லவோ அவள் ! 17-Jul-2017 9:15 am
அருமை கற்றார் என்ற சொல்லுக்கு கல் தான் மூலம் கற்றார் கல்லாதார் என்கிறோம் வேறு வழியில் கற்றவர் கற்காதவர் என்றும் சொல்கிறோம் கல்பனா என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்தன கற்பனா கற்பனை என்ற சொற்கள் அது ஒரே சொல் கல்பனா கல்பனை என்று சொல்லலாமே ! 17-Jul-2017 8:48 am
குழலோன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2017 8:30 am

விளக்கைத் தேடும் விட்டிலின் வாழ்வு
விளக்கிலே முடிவது போல - குடிப்
பழக்கத்தில் மூழ்கும் மனிதனின் நிலையும்
போதைக்கு அடிமை மறவாதே!

கலையிற் சிறந்த நல்லோர் வாழ்வும்
தடம்மாறிப் போனது குடியாலே - அவர்
தனைமறந்து தரமிழந்து தடுமாறி வீழ்ந்ததும்
தள்ளாட வைக்கும் மதுவாலே!

மலையளவு செல்வமும் மங்காத பெரும்புகழும்
மதுவினால் மாறிடும் நொடிப்பொழுதில் - கேட்டை
விலைகொடுத்து வாங்கிடும் கெடுமதி வாழ்வினில்
வேதனையைச் சேர்த்திடும் உணர்மனமே!

குணநலம் போற்றும் சான்றோர் பார்வையில்
குடிமகனைப் போலோர் அற்பனில்லை! - நல்ல
மதிநலன் கொண்டோர் மதுவின் பாதையில்
மறந்தும் செல்லத் துணிவதில்லை!

மேலும்

வாழ்த்துரைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி நட்பே! 12-Jul-2017 2:52 pm
மதுவில் மடிந்து போகிறது மானுட குணம்... வளம்மிகு வரிகள் கருத்தோடு நிறைந்துளது. மனம் திறந்த வாழ்த்துக்கள்... 12-Jul-2017 2:42 pm
"""கலையிற் சிறந்த நல்லோர் வாழ்வும் தடம்மாறிப் போனது குடியாலே""... .. உண்மை தான் நட்பே...... 12-Jul-2017 1:22 pm
குழலோன் - கவிபுத்திரன் எம்பிஏ அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2017 2:39 pm

உலக அளவில் தற்கொலைகள் அதிகம் நடப்பதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இதற்கு முக்கியமான காரணம் என்ன? இது பற்றிய உங்களின் கருத்து?

மேலும்

தற்கொலை கோழைத்தனம் என்பார்கள். கோழைத்தனமல்ல, கையாலாகாத்தனம்! காதல் தோல்வியாகட்டும், வேலையின்மையாகட்டும் ..... 29-Nov-2017 5:18 am
அடிப்படையில் அறியாமைதான் காரணம்! இல்லாத காதலைத் தேடும் பொல்லாத மோகம்! 07-Jul-2017 12:10 pm
காதல் தோல்வி 28-Jun-2017 3:12 pm
குழலோன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2017 10:12 am

கட்சிக்குக் கொடிபிடிக்கும் இளைஞனே – அது
காலத்திற்கும் துணைவருமா? எண்ணிப்பார்!
பஞ்சையில் போராடுகிறார் தந்தை – அவர்க்குப்
பக்கபலமாய் நீயிலையே! திரும்பிப்பார்!
கொஞ்சு மொழிக்கு அடிமைதான்! – நல்ல
பஞ்சணைச் சுகந்தேடும் பருவம்தான்
வஞ்சனை மாந்தரை அணுகாதே – அவர்
வலையில் சிக்குண்டு கலங்காதே!

மேலும்

குழலோன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2017 7:23 pm

வாழ்க்கை வழக்கன்று; விளக்கம் பெறுதற்கு
வெறுப்பில் வாழாதே! வெதும்பிச் சாகாதே!
தாழ்வு வரும்போது தளர்ந்துநீ போகாதே
தோல்வியைப் புறந்தள்ளு! புத்தெழுச்சி கொண்டெழு!

தாமரையின் தன்மையது சேற்றினால் மாறிடுமோ
சந்தனத்தின் வாசமது திரையிட்டால் போயிடுமோ
சோதனையின் விளிம்பில்தான் சாதனை பிறக்குமடா!
சிந்தனையை நேர்படுத்து; சிக்கல்கள் மறையுமடா!

வேதனை கடந்தவரே வாகை சூடிடுவார்
விலகி நின்றவரோ விரக்தியில் மூழ்கிடுவார்
போராடும் குணமிருந்தால் எதிர்ப்புகளும் சுகமாகும்
பகையெல்லாம் தூளாகும்; துணிவே துணையாகும்!

மேலும்

நல்ல அறிவுரை கவிதை.... காதல் கவிதைகளை விட இது போன்று தன்னம்பிக்கை வரிகளை வாசிக்கவே மனம் நாடுகிறது... தொடருங்கள் உங்கள் கவி பயணத்தை விதையுங்கள் கவி மூலம் நற்கருத்தை ....... 20-Jun-2017 7:33 pm
குழலோன் - கவிபுத்திரன் எம்பிஏ அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2015 4:00 pm

2020க்குள் இந்தியா வல்லரசு ஆகுமா?

மேலும்

ஆசைப்படலாம்.....ஆனா பேராசைப்படக்கூடாது..! 24-Feb-2015 5:48 pm
அட ேபேோங்க... 18-Feb-2015 11:43 am
வல்லரசாகும்! ஆனால், அது நல்லராய் இருக்குமா என்பதுதான் தெரியவில்லை!!? 17-Feb-2015 8:16 pm
குழலோன் - ஜவ்ஹர் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2014 10:18 am

தமிழ்தான் தன் உயிர், அதுவே இன்பத் தமிழ், அதுவே தனது சந்தோசம் என தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தனர் பண்டைய அரசர்களும் அறிஞர்களும்.அப்படி இருக்க இன்று ( பலரிடம் )ஏன் நம் தமிழர்களிடம் விரும்பத்தகாத மொழியாக தமிழ் மாறியது.

தமிழின் வீழ்ச்சி எக்காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது?அதற்கான காரணம் யாது?

( தமிழ் சம்மந்தமாக கேள்வி தொடுத்தால் மிகக் குறைவானவர்களே பதிலளிக்கின்றனர் )

மேலும்

மகிழ்ச்சி 03-Jul-2014 1:06 pm
தமிழ்போல் இனிய மொழியில்லை; தரணியில் அதற்கு நிகரில்லை; விழிபோல் மொழி காக்காவிடில் எழுச்சி என்பது தமிழுனுக்கில்லை!!!! சூடுசுரணை அற்ற தமிழன்!!! சொந்தப்புத்தி இல்லாத் தமிழன்!!!! 03-Jul-2014 7:15 am
எங்கள் ஊரில் இப்படிச் சொல்வார்கள், தாய் மொழியைப் பழித்தால் தாயை பழிப்பது போல் என்பார்கள்! தாய் மொழி பேசப்பட வேண்டும் போற்றப்பட வேண்டும்!வேற்று மொழிகள் எப்படித்தான் பேசினாலும் அது நமக்கு அந்நிய மொழிகளே! நன்றி! 01-Jul-2014 5:34 pm
​வௌ்ளையன் ஒழிக என்று சொன்னதும் சுதந்திர தாகம் கொண்டதும் நம்மை நாமே ஆட்சி செயவதும் எம் தாய் நாடு ,தாய் மொழி என்பன வளம்பெற வேண்டும் என்பதற்காகவும்தானே! இந்தியா சுதந்திரம் பெற்று 67 வருடங்கள் சென்றும் இந்நிலை இன்னும் மாறவில்லையே! மாறத்தேவையில்லை என நினைக்கிறதா அரசு? கருத்துக்கு நன்றி ஐயா! வாழ்க தமிழ்!! 01-Jul-2014 5:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
myimamdeen

myimamdeen

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

myimamdeen

myimamdeen

இலங்கை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

myimamdeen

myimamdeen

இலங்கை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே