சிலந்திவலை

கட்சிக்குக் கொடிபிடிக்கும் இளைஞனே – அது
காலத்திற்கும் துணைவருமா? எண்ணிப்பார்!
பஞ்சையில் போராடுகிறார் தந்தை – அவர்க்குப்
பக்கபலமாய் நீயிலையே! திரும்பிப்பார்!
கொஞ்சு மொழிக்கு அடிமைதான்! – நல்ல
பஞ்சணைச் சுகந்தேடும் பருவம்தான்
வஞ்சனை மாந்தரை அணுகாதே – அவர்
வலையில் சிக்குண்டு கலங்காதே!