ருசிக்கும் மனம்
அன்றைய நினைவுகளை
அணுவும் பிசகாமல் அடிக்கடி
அசை போடும் என் மனம்
இளையராஜாவுடன் சேர்ந்து
இம்மியும் சுதி பிறழாமல்
இசை பாடும் என் மனம்
விண்ணை முட்ட பார்க்கும்
கார்முகிலின் வண்ணம் சேர்ந்து
மிசை சேரும் என் மனம்
நகரம் விட்டு தமிழ்மண்ணின்
சிறப்பு உணவு வகைகளை
ருசித்து ரசிக்கும் என் மனம்
அலங்காநல்லூர் களமிறங்கி
காளை அடக்கும் எண்ணத்தில்
நன்கு விசர்க்கும் என் மனம்
திசைகள் யாவும் கட்டுகடங்காமல்
சுற்றி திரியும் என் மனதை பிறர்
குரங்கு என்று ஏளனம் செய்வர்
சிலநேரம் கோயில் என புகழ்வர்
ஆனால் யோசித்து பார்க்கிறேன்
இறைவனிடம் யாசித்தும் பார்க்கிறேன்
என்னுள் மிகவும் வித்தியாசமானதும்
என்னை பிறரில் வித்தியாச படுத்துவதும்
என் மனம் அன்றி வேறில்லை
என் மனம் இன்றி நானில்லை

