மழையில் மழலை ஆனேன்
 
 
            	    
                மழையில் நனைந்து ஆடும்,
  மழலை ஆனேன் நானும் !
காகித கப்பல் கொண்டு,
  களிப்பாக விளையாடிய நாட்கள்,
தூரலில் துள்ளிக் குதிக்கும்,
  சாரலாக நினைவில் வந்தது !
கோப்பையில் தேநீர் கொண்டு,
  குளிர்ந்த காற்றை இரசிக்கையில்,
துணிந்தது  மழை  மேகம் ,
  தணிந்தது விவசாயி தாகம் !
 
                     
	    
                
