இழந்த சுவை கிடைக்காவரம்
இழுத்துக் கட்டிய
சேலையைத் தூக்கி
சொருகி விட்டு
பழந் துணியைக்
கையில் எடுத்து
அருவாளை தூக்கி
தோள் மேல் வைத்து
கொண்டு காட்டில்
சுள்ளி பொறுக்கி அதை
தன் தலைமேல் சுமந்து
வந்து மண் பாத்திரத்தில்
சமைத்து சூடாகச் சுவைத்த
உணவின் சுவை எங்கே
குட்டைப் பாவாடை
போட்டு கையில்
எழுதுகோல் எடுத்து
தோள் மேல் விலை
உயர்ந்த பை போட்டு
போய் குளிர் சாதன
அறையில் அமர்ந்து
கணினியைத் தட்டி
தட்டி பணியை முடித்து
வந்து கடையில் தயார்
செய்த உணவை வாங்கி
வந்து அவிந்த பாதி அவியாத
மீதி என்று உண்ணும் உணவின்
சுவை எங்கே.
உலக மாற்றம் மனிதனின்
மாற்றம் உணவு மாற்றம்
நாகரிக மாற்றம் இத்தனையும்
சேர்ந்து கெடுத்துவிட்டது
மனிதனின் உடலை பெயர்
அறியமுடியாத நோய்கள்
வருகையை வரவேற்கின்றது
இந்த மாற்றங்கள் அத்தனையும்..
அருசுவை உணவை இழந்த
சமுதாயம்