மழையும் மழைக்காதலியும்
இன்று எங்கள் இருவருக்கும்
சண்டை !!!
என் கல்லூரி தொடங்கும்வரை
வரவே இல்லை .... !
நானும் வா ..! வா ..!
என்று பல முறை சொல்லியும்.
வரவில்லை,
வேண்டும் என்றே என்னை
பார்க்க கூடாது என்று,
வேடிக்கை வேறு இதில்
சிறிது சிறிது நேரம் ...!!!
நான் மட்டும் சும்மாவா
இருப்பேன் ?
என் வண்டியில் செல்லும்
போது நீ என்னை
தொடாத படி முழுவது
பாதுகாப்பாக சென்றேன்...!!!
பிறகு ,
நீ தூரமாக
என்னை ஜன்னல்
வழி அழைத்ததும்
நான் திமிர் பிடித்தவளாய்
உன்னை பார்க்காமல்
நடித்ததும்...!!!
இருவருக்குள்ளும்
இருந்த "நம் காதல்"
கண்டிப்பாக பாவம்
என் முன் பாடம்
நடத்தி கொண்டு இருந்த
என் பேராசிரியருக்கும்
தெரிந்து இருக்க
வாய்ப்பு இல்லை... !!!
இப்படிக்கு,
மழையும் மழைக்காதலியும்.