என்னை மாற்றிய இயற்கை
நுனிக் கிளைகளில் மலர்கள் - புல்லாங்குழலில்
நுழைந்து வெளியேறும் ஸ்வரங்கள் - என்று நான்
தென்றலுக்கும் உருவம் கொடுத்தேன் ரசனையால் - நான்
தெள்ளு தமிழ் தினம் படித்தேன் கவிதையாய்
எனது கர்வம் - கவிஞன் என்று உருவெடுக்கும் - பின் அது
இயற்கை தனை கண்டவுடன் பணிந்து வணங்கும் ....!!
இயற்கைக்கும் மீறிய கவிதை வேறில்லை - இதை
இனிமையாய் நான் உணர்ந்தேன் - கர்வமில்லை....!!