உன்னை புயல் என்று கூறுவேன்
அதிகாலை பணியிலும், என் அங்கமெல்லாம் கரையுதே !
அழகே நீ வந்ததால்.
ஓடிய நீர், ஓடையில் அமைதியாய்.
அது போல்,
ஒளி வீசிய நிலவும் உன் முகத்தில் அமைந்தது !
உன்னை பூவென்று கூறேன் நீ வாடிவிடுவாயே !
உன்னை புயல் என்று கூறினேன், என்னை வாட்டியெடுப்பாயே !
ஓர கண்ணால் என்னை பார்பாயே நீ நடக்கையில்.
பூக்கள் புன்னகை வீசுதே, நீ வருகையில் !
என் உலகம் அமைதியானது,
நீ துயில்கையில் !
பாரம் ஒரு பாரமல்ல நீ தொடுகையில் !