NAGARAJ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  NAGARAJ
இடம்:  COIMBATORE
பிறந்த தேதி :  24-Jun-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Aug-2014
பார்த்தவர்கள்:  67
புள்ளி:  17

என்னைப் பற்றி...

நல்ல நண்பன்

என் படைப்புகள்
NAGARAJ செய்திகள்
NAGARAJ - நெல்லை ஏஎஸ்மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2015 4:21 pm

புறங்கால் பிடரி பட
புழுதி பறக்கும்
புரவியின் துள்ளலுடன்
புதுமைப் பயணம் . . . . . .

அகரமும் உகரமும்
அகவலுடன் கொப்பளிக்க
ஆனந்த ஊஞ்சலில்
அழகான நாட்டியம் . . . . .

பாதை எங்கும் பூமரங்கள்
பாங்குடன் மணம் வீச
பாவலனின் காகிதங்கள்
பட்டமாகி சிறகடிக்கும் . . . . .

ஏந்திழைகள் விழி பார்த்து
ஏற்றமிகு வரிகள் கூடி
ஏகாந்த கவிதைகளாய்
ஏணியென உயராதோ . . . . .

பாமரர்கள் படுந்துன்பம்
பார்த்து மனம் பதைபதைக்க
சாமரம் வீசி வரும்
சாந்தம் தரும் வார்த்தை பல . . . . .

காளையர்கள் காதலிக்க
கன்னியர்கள் மனமினிக்க
காதல் பல பிறந்து
காவியங்கள் படைக்காதோ . . . . .

போற

மேலும்

நன்று 05-Mar-2015 12:17 pm
நன்றி தோழமையே. 12-Feb-2015 11:10 pm
அருமையான கற்பனை 12-Feb-2015 6:28 pm
நன்றி தோழமையே. 12-Feb-2015 6:26 pm
NAGARAJ - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2014 3:38 pm

காட்டை அழித்து காகிதம் செய்து
கவிதை எழுதுவதென்ன?
என்னுள்,
கண்கள் பறித்து சிநேகிதம் சொல்லி
காதல் எழுதுவதென்ன?
எரிமலை வெடித்து நிலங்களை அழித்தும்
வைரம் விரிப்பது என்ன?
என்னுள்,
எரியும் இதயம்
வெடித்து சிதறி
காதலை விரிப்பது என்ன?
கண்ணை கட்டி வழிகாண திரிகிறேன்.
அதற்கு முன்னால்,
உன்னை சுட்டி விழிகாண
விளைகிறேன்.

மேலும்

அருமை 26-Nov-2014 8:40 am
அழகான காதல் 23-Nov-2014 5:35 pm
வரிகள் அழகு !! விளைகிறேன் என்பது விழைகிறேன் என்று இருக்க வேண்டுமா பாருங்கள் !! 23-Nov-2014 4:09 pm
NAGARAJ - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2014 9:22 pm

மழையில் நடந்து வரும் மலரே.
உன்
பூவிதழ்கள் சிரிப்பால் பூக்கிறது.
மழை துளிகளோ வண்டுகளாய் வருகிறது.
உன் தேன் சொட்டும் சொற்கள் மழையை வரச்சொல்கிறது.
வேண்டாம்
ஊரே வெள்ளக்காடாகிறது.

மேலும்

NAGARAJ - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2014 7:03 pm

கூந்தலை பின்னி சடையிடும் பெண்ணே.
அதை கண்ட பின்னே
சல்லடையானேன்.
காதல் காவியம் கேட்டறிந்தேனே.
உன் கண்களில் அதனுடன் வாழ்ந்திளைத்தேனே.
மாலையில் மயில்தான் ஆட கண்டேணே.
மங்கை நீ நடக்கையில்
அதனை நினைத்தேனே.
மழை வரும் முன்னே காற்றால் உடல் சிலிர்க்கும் பெண்ணே.
நீ
சேலை அணிந்து வந்தால் காற்று சிலிர்த்தாட கண்டேன்.
உன் நயமான பேச்சால்
நான் நத்தையானேன்.
இதமான கண் வீச்சில்
இடர்பட்டு போனேன்.

மேலும்

மிக அருமை ஆடகண்டேணே= ஆடக்கண்டேனே 05-Sep-2014 12:38 pm
நன்று. 05-Sep-2014 11:14 am
NAGARAJ - NAGARAJ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2014 4:59 pm

செங்கதிரிலே நீ வருவாய் என காத்து நின்றேன் !
என் குறுதியில் நீ உறைந்தாய் என தேடி கண்டேன் !
நீ கடிதம் எழுத எழுத எழுத்துக்கள் அது மின்னும் !
உன் கடிதம் படிக்க படிக்க காதல் என்னை கவ்வும் !
கடலோர மணல்திட்டு அலை அரிக்கும் தானே,
என் மனதோரம்,
உன் பெயர் மெட்டு தினம் இசைக்கும் மானே !
ஈரம் அது வெயில் பட்டு இருந்த இடம் மறையும்,
என் உதிரம் அது உன் கால் பட்டால் இடியை தூக்கி எறியும் !
ஈசனவன் பாதியிடம் சக்தியிடம் கொடுத்தான்.
இனிய மொழி பேசும் உன்னை இதயத்திடம் வைத்தேன் !
அருவி கொட்ட நீர் துளிகள் காற்றினிலே பரவும்.
அருமை மொழி நீ பேச பூவாசம் வீசும் !
கண்ணிமைக்கும் நொடி பொழுதில் நீ என்னை காண்பாய் !
கற்சிலையை செத

மேலும்

arumai 29-Aug-2014 10:34 pm
NAGARAJ - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2014 7:31 pm

மணபெண்ணான இருவீட்டார் மகளே.
மாப்பிள்ளை கோலத்தில் வந்தமர்ந்த மகனே.
திருமண திருவிழா நடக்கும் இடத்தில்
பக்தர் இருவரே.
வாழ்த்த வந்த சொந்தங்கள் தெய்வமவர்களே,
முக்கோடி தேவர்களுக்கு சமமிவர்களே.
வாழ்த்துக்கள் வரம்தானே,
வாழ்வை துவக்குங்கள்.
வாழ்வினிலே வானம் போல உயர்வை அடையுங்கள்.

மேலும்

வாழ்த்துகிறேன். தமிழ் போல் வாழ்க. 29-Aug-2014 5:31 am
NAGARAJ - NAGARAJ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2014 10:33 am

ஓவிய தூரிகை
நிறத்தை துகிலுரிக்க !
தூங்காத விழிகள்
தூக்கத்தை துகிலுரிக்க !
மின்னும் இதழ்கள்
பேச்சை துகிலுரிக்க !
அதை,
கேட்ட என் செவிகள்
நினைவினை
துகிலுரிக்க !
உன் கண்களோ என்னை கிள்ளுகிறது !
என் மனமோ,
உன்னை காதலிக்க துள்ளுகிறது !

மேலும்

நன்று! 28-Aug-2014 3:54 pm
படைப்பும் மனதை அள்ளுகிறது. 28-Aug-2014 11:50 am
நல்லா இருக்கு !! தொடர்ந்து எழுதுங்க !! வாழ்த்துக்கள் !! 28-Aug-2014 10:40 am
NAGARAJ - NAGARAJ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2014 9:30 pm

திருடும் கண்ணை பார்க்காதே அவளிடம்,
திருடு போகும் உன் மனம்.
பேசாதே மலர் இதழிடம்,
உன் மதி சாகும் தமிழிடம்.
அருகில் அமராதே அவளிடம்.
பறி போகுமே உன் புகலிடம்.
நினைத்து நினைத்து பார்க்காதே அவளை,
உன்னை குளிரிலிம் நனைத்திடுமெ
காதல் குவளை.
உயிர் இருந்தும் கண்கள் திறந்தே உறங்குவாய்,
காதல் உறைவிடம்
உன் கண்ணில் உள்ளதால்.

மேலும்

அழகான ஓவியம்! அழகான படைப்பு! 27-Aug-2014 10:40 pm
சூப்பர்! 27-Aug-2014 9:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஆசிஷ் விஜய்

ஆசிஷ் விஜய்

உமரிக்காடு, தூத்துக்குடி
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Alagarsamy

Alagarsamy

Madurai
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
மேலே