கூந்தல் பெண்ணே
கூந்தலை பின்னி சடையிடும் பெண்ணே.
அதை கண்ட பின்னே
சல்லடையானேன்.
காதல் காவியம் கேட்டறிந்தேனே.
உன் கண்களில் அதனுடன் வாழ்ந்திளைத்தேனே.
மாலையில் மயில்தான் ஆட கண்டேணே.
மங்கை நீ நடக்கையில்
அதனை நினைத்தேனே.
மழை வரும் முன்னே காற்றால் உடல் சிலிர்க்கும் பெண்ணே.
நீ
சேலை அணிந்து வந்தால் காற்று சிலிர்த்தாட கண்டேன்.
உன் நயமான பேச்சால்
நான் நத்தையானேன்.
இதமான கண் வீச்சில்
இடர்பட்டு போனேன்.