விழி காண விளைகிறேன்

காட்டை அழித்து காகிதம் செய்து
கவிதை எழுதுவதென்ன?
என்னுள்,
கண்கள் பறித்து சிநேகிதம் சொல்லி
காதல் எழுதுவதென்ன?
எரிமலை வெடித்து நிலங்களை அழித்தும்
வைரம் விரிப்பது என்ன?
என்னுள்,
எரியும் இதயம்
வெடித்து சிதறி
காதலை விரிப்பது என்ன?
கண்ணை கட்டி வழிகாண திரிகிறேன்.
அதற்கு முன்னால்,
உன்னை சுட்டி விழிகாண
விளைகிறேன்.

எழுதியவர் : நாகராஜ் துளசிமணி (23-Nov-14, 3:38 pm)
பார்வை : 121

மேலே