தாகம் எனக்கு தீருமோ
அறுவடை பருவம் இது
முற்றும் விளைந்த நெல் மணிகள்
தலை சாய்ந்து வரவேற்க்க
துள்ளி அவளோ ஓடிவர
வெட்டவெளி நிலப்பரப்பில்
அடிக்கும் சாரல் காற்றினிலே
அங்கமெல்லாம் கவிதை பாடும்
ஓசை எனக்கு கேக்குதடி
பத்து விரலும் துடிக்குதடி
சிட்டு உன்னை தொட்டுடவே
சீறும் பாம்பாய் இருப்பாளோ
சீன்ட என்னை விடுவாளோ
கருமேகம் வெளுக்கிறது
வாய் திறந்து சிரிக்கையிலே
விட்டு விட்டு அடிக்குதடி
சூட்டை ஏற்றும் வாடை காற்று
ஓற்றையடி வரப்பினிலே
ஆடி அசைந்து வருகையிலே
தடிக்கி அவள் விழவாளோ
தாங்கி பிடிக்க நேருமோ
தாகம் எனக்கு தீருமோ.........................