என் வரிகளில் - சர்க்கரை நிலவே பெண் நிலவே யூத்
தித்திக்கும் நினைவே, தேன் நினைவே
நினைக்கும் பொழுதே இனித்தாயே
தேனிலுமில்லை துளியில்லை உன் இனிமையே ..
தித்திக்கும் நினைவே, தேன் நினைவே
நினைக்கும் பொழுதே இனித்தாயே
தேனிலுமில்லை துளியில்லை உன் இனிமையே .
மனம் உலர்ந்த மலரடி பெண்ணே
அதை நுகர்ந்து உயிர்க்கொடு கண்ணே ..
உன் மடியில் என்னை கிடத்திக்கொண்டால்
மடிந்தாலும் சுகம்தான் கண்ணே ..
கனவை கெஞ்சுது கண்கள்
நின் நினைவை கொஞ்சுது நெஞ்சம்
நினைவுக்கென் மனமே மஞ்சம்
என் பஞ்சு நெஞ்சில் தூங்கம்மா ....
தித்திக்கும் நினைவே, தேன் நினைவே
நினைக்கும் பொழுதே இனித்தாயே
தேனிலுமில்லை துளியில்லை உன் இனிமையே.....
காதலென்றால் விடமாம் அதை அறிந்தும் நானே
உயிர்த்தாகம் தீர குடித்தேன் தினமும் தானே
மாயம் நிறைந்த மயமா உன் நினைவும் பெண்ணே
பெரும் காயம் கூட கடுகாய் உன் நினைவின் முன்னே
அன்பே உன் முத்தத்துளிகளை அணை கட்டி சேமித்தேன்
அதனோடென் கணக்கும் கலக்க அணை தாண்டி வடிகிறதே .....
தொலைவில் இருப்பது உன் தவறா
உன் உயிரில் கலந்தந்து என் தவறா
மனம் நிறைந்து நின்றது என் தவறா
மனச்சரிவு கொண்டது உன் தவறா
அட கண்ணீருடன் என் செந்நீர் தருவேன் உயிரே
உன் பாதம் கழுவ .....
கனவை கெஞ்சுது கண்கள்
நின் நினைவை கொஞ்சுது நெஞ்சம்
நினைவுக்கென் மனமே மஞ்சம்
என் பஞ்சு நெஞ்சில் தூங்கம்மா ....
மிக இயல்பாய் தானே நீயும் ஆசுவாசம் கொண்டாய்
அதையே சுவாசம் என்று நான் முடிவே கொண்டேன் ....
மலையாளம் பேசும் மலர் நீ மனதால் எனக்காய்
அரும் தீராகாதல் கொண்டாய் இனி தமிழில் கணக்காய்.
நுகர்ந்தாலே கரைந்திடும் பொருளாய் ஏதேனும் இருந்திட்டால்
உருமாறி, நீ நுகர நுகர நகராமல் கரைந்திடுவேன்
சொர்க்கம் என்பது சொற்பமடி
அதை நின்றுவென்றிடும் உந்தன் மடி
உறங்க வேண்டுமடி உனது மடி
விழித்ததும் இறந்து போவேன் அடுத்த நொடி ...
இந்த உடலில் உயிரும் இருக்கும் வரைக்கும்
நீங்காதுன் நினைவும் எனையே !!
தித்திக்கும் நினைவே, தேன் நினைவே
நினைக்கும் பொழுதே இனித்தாயே
தேனிலுமில்லை துளியில்லை உன் இனிமையே .......