கூட்டல்,பெருக்கல்,கழித்தல் - மாணவர்களுக்கான அறிவுரை கவிதை _போட்டி கவிதை

நம்ம படிக்கலானானும்,
விதை நெல்லை வித்து
படிக்க அனுப்பின அம்மா!

எதிர்காலத்துல என் பிள்ளை
நல்லாருந்தா போதும்னு
குருகி,குருகி பணம் சேர்க்கும் அப்பா!

அம்மா,அப்பாவை மறந்து
சும்மாவே இருப்பதை
பொழுதுபோக்காக கொண்ட பிள்ளை.

சும்மாவும் இருக்கமுடியாம
அந்தபீஸ்,இந்த பீஸ்னு
பொய் சொல்லி காசை பிடுங்கி
கையில் மதுகிண்ணத்தோடு அலையும்
மதியிழந்த புதியமன்னர்களே!
நீ புது உலகை ஒன்னும் படைக்க போறதில்ல!


போதையில தல்லாடுறதும் இல்லாம
பாதை மாறி போன படைப்பாளர்களே..
நீ வீண்சகவாசத்த தவீர்!

வானத்துல பறக்குற மாதிரி நினைச்சுப்புட்டு
சர்,புர்னு பைக்ல போற சாகசவீரர்களே!
நீ சாகசம் செய்ய சாமனிய மனிதர்களின்
உயிர் உனக்கு சாதரண விளையாட்டு சாமானா?

விதியில் விளையாடும் வித்தகர்களே!
நீ வேகத்தை குறை!

வீரத்தோடு இருப்பத நினைச்சுப்புட்டு
வீழ்ந்துபோகும் இளவீரர்களே!
வெட்டிபேச்சு பேசி, டீக்கடை பெஞ்சில்
காலம் கடத்தும் கற்பனையாளர்களே!
நீ வீண்பேச்ச தவிர்!

சொல்புத்தியும் இல்ல,
சுயபுத்தியும் போகி ரொம்ப நாள் ஆகிபோச்சி...
சோம்பேறியா ஊர சுத்தாம,
சோறு ஊட்டி வளர்த்த தெய்வங்கள
சுகமா பாத்துக்க சொந்த
கால்ல நில்லு அது போதும்!

எழுதியவர் : அ.சௌம்யா (29-Aug-14, 10:40 am)
பார்வை : 325

மேலே