மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
முக்கியமான வேலை ஒன்றுக்காக
மெட்ராசுக்கு போகவேண்டி இருக்கு
முக்கியமான வேலை ஒன்றுக்காக
மெட்ராசுக்கு போகவேண்டி இருக்கு
தள்ளி போடலாமா பார்த்தேன் முடியல
பிறரை அனுப்ப நினைத்தேன் நடக்கல
போய்தான் ஆகவேண்டிய சூழ்நிலை
புறப்பட்டேன் முடிச்சிடலாம்னு நேர்ல
ரயில்வண்டி டிக்கட்டு வெயிட்டிங்குல
என்ன செய்ய டீடீ வைச்ச கருணைல
முதல்ல சீட்டு கிடைச்சி பாதி நைட்டுல
பெர்த் கிடைக்க சரியா தூக்கம் இல்ல
எக்மோர்ல எறங்கி நல்ல காபிதண்ணி
கூட சுகப்படலே இது நடுவுலே பாருங்க
ஆட்டோ காரனோட சண்டை வேற
சனியன் கேக்ற காசெ கொடுகலாம்ங்க
வாய்யா போய்யா பேச்சு கேட்கலாமாங்க
கம்ப்யூட்டர் கம்பெனி எல்லாம் எட்டி எட்டி
இருக்குதுங்க போக வர ரொம்ப சிரமம்ங்க
போனாலும் பாதி பேரு வேற மொழிங்க
நம்ம சரியா பேசி விவரம் கேட்க முடியல
எதுகெடு கம்ப்யூட்டர் பெட்டிய பார்த்து பார்த்து
என்னஎன்னமோ பேசி பேசி குழப்புறாங்க
பொழுது போனது தான் மிச்சம் பாருங்க
வந்த வேலை முடியாம வண்டிக்கு நேரமாச்சு
ச்சே நமக்கும் இந்த மெட்ராஸ் க்கும் சேராது
கிளம்பி ஊற பாத்து போகலாம் ஆகறது
ஆகட்டும்ங்க ஆனா பாருங்க இப்படிதான்
போன தடவை வந்த போதும் நினைச்சேன்
என்ன செய்ய யாது ஒண்ணுக்கும் மெட்ராஸ்
வந்து தானே காரியம் ஆக வேண்டி இருக்கு ...