திருமண வாழ்த்து
இரு வேறு மனம் ....
இரு வேறு குணம் ....
வெவ்வேறு கனவும் ....
ஒன்றாய் இணைந்தது திருமணத்தில்!........
இனி நான் நானில்லை .......
நீ நீயில்லை .........
நாம் என்று ......
அக்கினி சாட்சி கொண்டு
மாங்கல்யம் சூட்டி ....
ஆன்றோரும் சான்றோரும் வாழ்த்துரைக்க
இரு வேறு மனம் ....
இரு வேறு குணம் ....
வெவ்வேறு கனவும் ....
ஒன்றாய் இணைந்தது திருமணத்தில்!........
வற்றாத வளம் .....
குறைவில்லா நலம் ......
வழுவாத பண்பும் .... என
பதினாறும் பெற்று பெருவாழ்வு பெற்றிடுக ....
என உளமார வாழ்த்துரைக்கும்
அன்பு உள்ளம் .........