கவிதைத் துளிகள்
குடியைக் குடிக்கும் குடியை குடிக்கும்
குடிகள் கெடுதி குடிக்கு.
சிரிப்பாய் சிரிக்கச் சிரிக்காமல் ஊரார்
சிரிக்கச் சிறக்கச் சிரி.
நெஞ்செரிஞ்சிச் சாதலிலும் நன்றே கருநாக
நஞ்சருந்திச் சாகும் நிலை.
இல்லாத பொல்லாத தெல்லாமே சொல்லாத
எல்லோர்க்கும் நல்வாழ்வே கொள்.
வெற்றுக் கரத்தோடு வந்த நமக்கிங்கு
நெற்றிப் பணமும் கடன்.
உள்ளத்தி லொன்று உதட்டில் பிரிதொன்று
கள்ள மனிதர் குணம்.
இல்லாத பேர்க்கு இருந்தால் கொடுக்கின்ற
பொல்லாத வர்க்கும் புகழ்.
இருமனம் சேரும் திருமண வாழ்வில்
நறுமணம் இன்றில் பணம்.
தாடி வளர்த்துத் தவிக்க வருங்காதல்
தேடித் திரிதல் வினை.
மின்னி இடிமுழக்கி பெய்யும் மழைபொய்ப்பின்
மண்ணில் பசுமைக் கொலை.
*மெய்யன் நடராஜ்