எங்கே செல்லும் மானிட பாதை
வானும் மண்ணும் உறவுதான்
வாழ்க்கை செய்த பரிவுதான்
இயற்க்கை எனும் பிறப்பு
தானும் வாழ்ந்து பிறரை
வாழ்விக்கும் பொறுப்புதான்
தர்மம் என்றும் சிறப்பு தான்
இருப்பதை கொண்டு வாழாமல்
பறக்கும் இந்த உலகம் தான்
பிரம்மன் பார்த்து படைத்த சறுக்கல் மரமடா
ஓடும் நதியும் பள்ளம் நோக்கி
மனித வாழ்வும் நவநாகரிகமெனும் பள்ளத்தில்
தர்மம் குறைந்து அதர்மம் தழைத்து
சீறி பாயுது உள்ளத்தில் வாழ்க்கை கணக்கு
எல்லாம் பாழாய் போன ஆசையினால்
தோற்றுவித்த தாய்தந்தையை தூற்றி போகுதடா
பாத சுவடுகள் அறியாது பாரம் சுமக்குதடா
வேட்டைபுலிகள் மானை துரத்திப் பிடிப்பதுபோல்
பணத்தை துரத்தி மனதை மறக்குதடா
வெட்கி தலைகுனிந்து வானும்
கண்ணீர் கொட்டித் தீர்குதடா
ஏற்றம் ஏற்றமென்று கூவி
ஏமாற்றி திரியும் உலகமடா
ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்குதடா
தேவைக்கு புது உறவை தேடிச் சேருதடா
தேவை முடிந்ததும் தெருவினில் விடுதடா
இயற்க்கை மறந்து செயற்கை போற்றும் மானிடமே
இயற்கையின் முன் செயற்கை தோற்கும்
என்பதை மறந்து போனதேனடா
வறுமையும் இளமையும் என்றும் நிரந்தரமில்லையடா
நாளைய விடியலில் உன்னிலை யாதென எண்ணிப்பாரடா
ஒவ்வொரு இலையுதிர்வும் புதிதாய் ஒன்றை உருவாக்கும்
நீயும் ஒருநாள் உதிர்த்தது யாதென உணரும் காலம் நரகமடா !!