தேசி நேசி
டேய் சின்னவனே சிக்குரேசு (சிக்ரேஷ்)
உன்ற மனைவி மல்லுகேசி (மல்கேஷி) க்கு
இரட்டைப்
பெண் குழந்தைகள் பிறந்து நாலு நாளு
ஆச்சு. நம்ம குடும்ப சோசியரைப் போயிப்
பாத்து வாடா.
@@@@@
வேலை கொஞ்சம் அதிகம் இருந்துச்சு.
இதோ இப்பவே போறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வணக்கம் சோசியர் ஐயா.
@@@@
வணக்கம் சிக்ரேஷ். நல்ல செய்தியோட
எங்கிட்ட வந்திருக்கிறன்னு தெரியுது.
சொல்லு தம்பி.
@@@@@
சோசியர் ஐயா நீங்க ஆறு மாசத்துக்கு
முன்னாடியே என்ற மனைவி
மல்லுகேசிக்கு இரட்டைப் பெண்
குழந்தைகள் பிறக்கும்னு கணிச்சுச்
சொன்னீங்க. அதே மாதிரி புதன்கிழமை
காலை அஞ்சு மணிக்கு என்ற மனைவிக்கு
இரட்டைப் பெண் குழந்தைகள்
பிறந்திருக்குது. அது தான் உங்களைப்
பார்க்க வந்தேன்.
@@@@@@
நல்லது சிக்ரேஷ். குழந்தைகள் பிறந்த
நேரமும் இராசியும் ராஜயோகம் உடையது.
கணினி ஜாதகம் இந்தா. எடுத்துக்கோ.
அருமையான வாழ்க்கை அவுங்களுக்கு
மட்டுமல்ல உங்க குடும்பம் பல வகையிலும்
முன்னேற்றம் அடையும்.
@£££££££
சோசியர் ஐயா, அவுங்க இராசிப்படி
நீங்களே பேரு வச்சிருங்க.
@@@@@@@
முதலில் பிறந்த குழந்தைக்கு 'தேசி' -ன்னு
பேரு வச்சிடு. அடுத்துப் பிறந்த
குழந்தைக்கு 'நேசி' -தான் பொருத்தமான
பேரு.
@@@@@@@#
தேசி - நேசி. அருமையான பேருங்க ஐயா.
தேசி - நேசி. சுவீட்டு நேம்சுங்க ஐயா.

