நாற்று நடும் பெண்

கரித்தூண்டாய் கறுகறுவென்று
கருத்துக்கிடக்கிறாள்
காலமெல்லாம் செத்துப்பிழைக்கிறாள்

சேற்றுக்குள் அவள் கால்களும்
கதை பேசும்

நாற்று நடும் அவள் அழகை
நாட்டமிடும் கொக்கு

நாட்டுப்புறப்பாட்டோடு அவள் போடும்
புதிரும்
பலருக்கும் புத்திக்குள் புகாத புதிராம்

காலை முதல் மாலை வரை
முகிலில் மதி மயங்கி
கிடக்கும் ஆதவன்
அவள் முட்டி வரை தூக்கிக்கட்டிய
கண்டாங்கி சேலையில்

பழையச்சோறு வாசமும், தேக்கு இலை
கருவாட்டுத்தூண்டும்
அவள் குடிசை மண்சட்டி மனம் சொல்லும்

வித்துகள் பல அவள் விதைக்க
விருட்சமம் கொள்ளும்
முதலாளி குருதும்

அவளின் அவல
நிலைக்கண்டு குமறும்
அவள் நட்ட கருதும்

அவள் வாயிற்றுப் பசியையும்
பரிமாறிக் கொள்ளும் குடும்பம்

இருந்தால் இன்று உணவு
இல்லையென்றால் அது கனவு

அவள் நீரிட்டு வர்த்த மரமாய்
செழுமை

இருந்தும் அவள் வாழ்வு ஏனோ
வறுமை..................

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (31-Aug-14, 2:20 pm)
பார்வை : 408

மேலே