ஆசிரியர்
மாறும் மாறும்
மனிதனின் உடை மாறும்,
மனிதனின் நடை மாறும்,
மனிதனின் தோற்றமும் மாறும்,
அரசியல் கட்சி கூட்டனியும் மாறும்,
உயர் நீதி மன்ற தீர்ப்பு
உச்ச நீதி மன்றத்தில் மாறும்,
கீதச்சரத்தின் வரிகளான;
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றோருவருடயதாய் மாறும்
இவை அனைத்தும் கண்டிப்பாய் மாறும்
அனால் அன்று என் ஆசன மீது நான் வைத்த மதிப்பு
என்றும் மாறவே மாறாது.