நிராகரிப்பு

நிராகரிப்பு
============
உன் இத்தனை கர்வங்களுக்கிடையில்
என்னை ஒளிந்துபார்த்து
"நீ ரொம்ப அழகா இருக்க"
என்று சொல்லும் அந்த நொடிதான்
உன்னை பெண் செய்கிறேன்
என் உதாசீனங்களிலும், ஏளனங்களிலும்
விளையாட்டுத்தனங்களிலும்
அன்பிலும், புரிந்துணர்வுகளிலும்
அடிப்படும் உன்னிடமுள்ள
நூறு சதமானம்
என்னை வாங்கிக்கொள்ளும்
பக்குவமற்றது
விலகும் என்னிடம் நெருங்கி
வலிக்கொள்ளும்
வரம் தான் உனதென்றாலும்
எதற்கோ தொடர்கிறாய்
அனுசரன்