MONEY MONEY MONEY - மணியன்

செல்லாதவன் ஆனாலும்
கள்ளத்தனமாக என்னை
மெல்ல வழியனுப்புகின்றனர் . . .

புழுதியில் புரண்டு
புழுங்கி நாறினாலும்
பூப்போல என்னை எடுக்கின்றனர் . . .

பல நேரங்களில்
பாவிகள் என்னைப்
பதுக்கி விடுகின்றனர் . . .

ஊர் உலகம்
உல்லாசமாகச் சுற்றினாலும்
உலகைக் காண முடியவில்லை . . .

பைக்குள்ளும் கைக்குள்ளும் திணித்து
பளபளப்பாக இருந்த என்னை
பாடாய்ப் படுத்துகின்றனர் . . .

உழைப்பாளி கைகளில்
உணவாக மாறும் நான்
ஊதாரி கைகளில்
உழன்று சுழல்கின்றேன் . . .

சில நேரங்களில் என்னைச்
சிறை வைத்தும்
சித்திரவதை செய்கின்றனர் . . .

பிரிய மனமின்றி எனைப் பார்த்து
பிறந்த குழந்தை முதல்
பிணமானவன் வரை
பிளக்கின்றனர் வாயை . . .

பல நேரங்களில்
படாத பாடு பட்டாலும்
பாட்டாளி கைகள் என்மேல்
படுவதே இல்லை . . .

எனைக் காட்டியே
ஏமாந்தவன் சிலரிடம்
எதையும் சாதிக்கின்றனர் . . .

கைகளில் பைகளில்
கவனமாக கையான்ட மனிதன்
கார்டுகளில் மறைத்து
கவலை மறக்கிறான் . . .

உனக்குத் தெரியுமா நண்பா
உள்ளே எனை வைத்து
உடனே போடும் பூட்டுக்கும்
என்னையே கொடுக்கிறான் . . . .

சும்மா சொல்லக் கூடாது
சுதந்திரமாய் நான் இருப்பது
சுவிஸ் வங்கிகளில் மட்டுமே . . . .



















குறிப்பு :- பிற மொழிக் கலப்பு இன்னும்
சேர்த்தால் இன்னும் என்னைப்
பற்றி நிறைய எழுதலாம். ஆனாலும்
பரவாயில்லை.இவன் கொஞ்சம்தான்
ஆங்கில வார்த்தை சேர்த்துள்ளான்
இப்படிக்கு -- நான் தான்.

*=*=*=*=* *=*=*=* *=*=*=*

எழுதியவர் : மல்லி மணியன் (31-Aug-14, 11:49 am)
சேர்த்தது : நெல்லை ஏஎஸ்மணி
பார்வை : 187

மேலே