உட்கட உட் கடவுள்

(வெண்கலிப்பா)
கல்லிலே உளிபட்டு கடவுளே வெளிப்பட்டான்
கல்லுக்கு உள்நின்றான் கண்ணுக்கு தென்பட்டான்
உள்ளொளிந் திருக்கின்றான் உட்கடஉட் கடவுளென
உள்ளொளி யுணர்த்தும் சிலை.
(உள்ளே இருந்தது தானே சிலை, கல்லில் வேண்டாத தவற்றை நீக்கிட சிலை உருவானது, அதுபோல் உன்மனத்தையும் உட்கட உட் கடவுள் வருவானென கோவில்களில் சிலைகளை வைத்து வழிபடுகிறோம்.ஐம்பொன் சிலைகள் வார்க்கப்படுகின்றன ஆனால் கற்சிலைகள் செதுக்கப்ப்டுகின்றன)