கூட்டிக் கழித்துப் பெருக்கல்

கூட்டிடு
பொய்கள் கழித்திடு
இதுதான் வாழ்க்கைப்
பாடமே !

பெருக்கிடு
துன்பம் வகுத்திடு
வாழ்வோடமும் சரியாய்
ஓடுமே !

பயிற்சி என்பது தோற்கலாம்
முயற்சி தோற்றிட
லாகுமா ?
இயற்கை சேர்கையால் மாறினும்
சாகுமா ?

இருட்டில் நாளுமே
உழல்வதால்
இருக்கும் சூரியன்
தெரியுமா?
அணைந்துபோன ஒரு
தீக்குச்சி
எரியுமா?

நட்பை நாளுமே கூட்டிடு
தப்புகள் பல கழித்திடு
ஞானம் வாழ்விலே பெருக்கிடு
நன்மை நெறிகளை வகுத்திடு

வாழ்வெனும் சைக்கிள்
வேகமாய் ஓட
தோள்களில் வலிமை
கூட்டிடு !

கொஞ்சம்
காற்றைக் கழித்தால்
கால்கள் வலுவுறும்
பயிற்சி இதுதான் காட்டிடு !

முயற்சி பெருக்கி
அரைபெடல் அடித்தால்
சைக்கிள் எளிது
ஏறிடு !

அறிவுரைகள் கேட்டு
அலுத்தது என்றால்
நிறுத்தவும் என்றே
கூறிடு !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (31-Aug-14, 9:49 am)
பார்வை : 83

மேலே