நேசமும் நேயமும்

மனிதநேயம் என்ற சொல்லே
இனி ஏட்டில் கூட தேடத்தான்
வேண்டும் போல சக மனிதனை
தோழமை கண்கொண்டு பார்க்கா
விடினும் எதிரியாக பாவிக்காமல்
இருத்தல் கூட மனித நேயம்
மிகுந்த செயலாகும் என்றே
பெருமிதம் கொள்ளத்தோணுதே
மண்ணுக்கு மரம் பாரமில்லை
மனிதன் எப்படி மனிதனுக்கு
பாரமாவான் ஈரமில்லாத இதயம்
உள்ளவனுக்கு நேசமும் நேயமும்
எங்கிருந்து வரும்....

எழுதியவர் : உமா (3-Sep-14, 5:24 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 612

மேலே