பாடும் குயில்

எறும்புகளின்
இடைவிடா
நடையினில்
இறுகிய கல்லும் குழியுமே . . . .

அடடா . . .
அற்ப மானுட இதயம்
அளவு மட்டும்
அன்று முதல்
இன்று வரை
இரும்பெனவே இறுகுவதேன் . . . .

நாத்திகனின்
நாவிலும்
நடனமிடும் இறைவன்
நல்லவனின் வாழ்வில்
நாடகம் ஆடுவதேனோ . . . .

தோல்வியில்
துவளும் மனது
வெற்றியில் மட்டும்
விண்தாண்டிக் குதிக்கிறதே . . . .

நிரந்தரமில்லாத
நிர்மூலங்களின்
நிதர்சனம் அறியாமல்
நிச்சயமற்ற நிலைகளை
நினைத்து ஏங்குவதேன் . . . . .

பாடும் குயில்
ஆடும் மயில்
பேசும் கிளி
சிரிக்கும் குரங்கு கூடப்
பாரினில் பார்ததுண்டு . . . .

எழுதும் யானை
படிக்கும் பாம்பு
ரசிக்கும் நரி
படைப்பினில் கண்டதுண்டா. .

எழுதும் கைகளே
ஏற்றிவிடும் ஏணிகள். . .
பரிவுள்ள நெஞ்சமே
பாமரனின் தஞ்சமே . . . .

ஏழைகளை என்றும்
ஏற்றி விடும்
ஏணியாய் மாறி
ஏற்றமிகு இமையால் மூடி
ஏங்கிடும் பாட்டாளியின்
ஏமாறும் நிலை அழிய
ஏதேனும் குரல் கொடுத்து
ஏகாந்தம் தழைய வைப்போம். . . .
என்றென்றும் இதை மறவோம் . . . . . . .













*=*=*=* *=*=*=* *=*=*=*

எழுதியவர் : மல்லி மணியன் (3-Sep-14, 8:26 pm)
Tanglish : paadum kuil
பார்வை : 138

மேலே