ஆசிரியர் தினம்

தாமரையை தாங்கும்
தண்டினைப் போல்!
தகுதியான தலைவர்களை
உருவாக்கும்
நல் ஆசிரியர்கள் !
மலையை பிளந்து
சிலையை உருவாக்கும்
சிற்பி போல்-நம்
அறிவைப் பெருக்கி
அறியாமையை அகற்றும்
நல் ஆசிரியர்கள்!
கழுகு தன் குஞ்சுகளை
பறப்பதற்கு பழக்குவது போல
பிறரின் அறிவுக் கண்களை
திறப்பதற்கு அனுதினமும்
உதவும் -நம் நல் ஆசிரியர் !
சுரங்கத்தைத் தோண்டி
தங்கத்தை எடுப்பதைப் போல்
பிள்ளைகளின் அறிவைத்
தூண்டி திறமையை
வெளிப்படுத்தும் ஆசான்
நல் ஆசிரியர்!!
அறிவைப் புகட்டும்
ஆசிரியர்களை
மதித்திடுவோம்!!
அனுதினமும் அவர்களைத்
தொழுதிடுவோம் !!
எழுத்தறிவித்தவன்
இறைவனாவான் !!-அவனை
எள்ளி நகையாடாமல்
ஏற்றங்கள் செலுத்தியே
போற்றிடுவோம் !!