புத்தகம்

புத்தகம்

படபடக்கும் சிறகுகளால்
பறக்கவைக்கிறாய் - எனை
வானில் அல்ல
இந்த இலக்கற்ற பூமியிலே

எத்தனையோ அஸ்தமனங்களை
அள்ளித் தெளித்துப்போகிறது........ சூழல்
சுழற்றியடித்த சுழல்காற்றாய்......

இளைப்பாற நினைக்கிறேன்
என் களைப்பாற்றுகிறாய்
கானலில் கண்டறிந்த சுவை நீராய்...

அன்னை மடியில் அடம் பிடித்து
இடம்பிடிக்கும்
இருவயதுக் குழந்தையாய்
உன்னிடம் வந்திடவே
ஏக்கம் கொண்டே தேடுகின்றேன்

நீ மிதந்து என்னை
மூழ்கடித்துப்போகிறாய் உன்
அறிவு ஆற்றில்...

எனக்கு
எட்டாக்கனி என்று எதுவுமில்லை
நீ என் கையில்
கிட்டும்நிலையில்......




கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (7-Sep-14, 2:22 pm)
Tanglish : puththagam
பார்வை : 130

மேலே