தேவையறிந்த உலகம்

சில நேரங்களில் சிரிப்பொலியாக,
புரிந்த வேளையில் புன்னகையாக,
காத்துக்கிடக்கையில் கவனிப்பாக,
நோயுட்றிருக்கையில் கண்ணீராக,
உடனிருக்கையில் உரையாடலாக,
உறவாடுகையில் முயங்குதலாக,
விளையாடுகையில் சிணுங்கலாக,
உறக்கத்தில் கட்டிகொள்வதாக,
விழித்தவுடன் தேடுதலாக,

பாத்திரமறிந்து போடப்படுகிறது,
காதல் பிச்சை....

எழுதியவர் : கல்கிஷ் (5-Sep-14, 3:28 pm)
சேர்த்தது : kalkish
பார்வை : 93

மேலே