தடயங்கள் மறைவதில்லை

நினைவுகளில்
நிஜங்களை தேடும்போது
சிந்தனை சிறகுகள்
சிறைபடலாம்...

பணங்களால்
பாதைகள் திருத்தப்படும்போது
புன்னகை பூக்கள்
உதிரிந்திடலாம்..

வார்த்தைகளால்
உறவுகளை வரையறுக்கும் போது
புதிய எல்லைகள்
புலப்படலாம்..

காலங்களில்
கனவுகளை தொலைக்கும் போது
தனிமை காடுகள்
தவிர்க்கப்படலாம்..

மௌனங்களால்
உண்மை உணர்த்தப்படும் போது
வாழ்வின் விளிம்புகள்
தென்படலாம்..

யார் கண்டது..?!
மீண்டும்
ஒரு முறை
நான் காதலிக்கபடலாம்..

எழுதியவர் : கல்கிஷ் (5-Sep-14, 3:31 pm)
சேர்த்தது : kalkish
பார்வை : 110

மேலே