எது தேவை

அதோ...
அவர்தான் கிராமத்தின்
சிகரம்!
பிடியரிசியையும்
கொடை வழங்காமல்
காசு தேடும்
கல்நெஞ்சான்!

இதோ...
இவர்தான்
வறுமையின்
வாரிசு!
பிடிப்பிச்சையெடுத்தாலும்
கொடை மருந்து கொடுப்பதில்
பெரும் வைத்தியர்!

நேற்றைய நாள்
உதவிக்கரம் வேண்டி
உதவும் கரம் தேடி
நேயாளி ஒருவர்
ஊருக்குள் புகுந்தார்

தெரு முழுவதும்
கடை இருந்தும்
கல்நெஞ்சு காசுக்காரன்
பொல்லால் அடித்தான்
ஒன்றும் இல்லையென்று!

வருமையின்
வாரிசு ஓடி வந்து
வீடு வரை
அழைத்துச் சென்று
பத்து ரூபா
பணமும் கொடுத்து
பட்டினித் தீயும் தணித்து
பக்குவமாய் அனுப்பி வைத்தா

எழுதியவர் : மிஹிந்தலைஏ.பாரிஸ் (6-Sep-14, 7:14 am)
Tanglish : ethu thevai
பார்வை : 86

மேலே