என் காதலின் முத்தம்

தனிமையில்
தயங்கி தயங்கி
இதழோடு இதழ்சேர்த்த முத்தம்...!
காமத்தில் முடிந்தது...!

ஆசையாய்
கன்னத்தில்
கொடுத்த முத்தம்...!
மாலை துணிக்கடையில் பயணித்து...!
இரவு...! Dai I Love You
என்று முடிந்தது...!

சுவாரசியமாக
சண்டைபோடுகையில்
ஆத்திரத்தில்
"உங்க அப்பா வீட்டுக்கே போடி"
என்ற சொன்ன வார்த்தையை
சமாதனம் செய்ய

கட்டியணைத்தபடி நெற்றியில்
கொடுத்தமுத்தம் ...!

உன்முடிவை மாற்றி
அமைதியாக என் மார்பின்
உன்னை உறங்கசெய்தது...!


ஒரே நாற்காலியில்
இருவரும்அமர்ந்து
ஒரே காப்பியை
சிக்கனமாக பருகியபோது
இதழ் சேராமுத்தம்
இன்பத்தில் மூழ்கடித்தது...!

மாதங்கள் சில கடந்து
நீ எடுத்த வாந்தி
பித்த வாந்தியா?
அல்ல
பிள்ளை வாந்தியா?

என்ற குழப்பத்தில்
வீடு திரும்பிய போது
வயிற்றில் கொடுத்த முத்தம்
உனக்கா ...?
இல்லை
நம் பிள்ளைக்கா...?
என்று இன்றுவரை
விடை தெரியாமல் போனது...!

சரியாக எட்டுமாதம் உனக்கு....!
உன் இரு கைகளில் ஒரு கை
வயிற்றில் இருக்கும் நம்பிள்ளை
தாங்கியபடியும் ...!

மற்றொரு கை என்னை தாங்கியும்
நீ நடக்கையில்...!
கைகளில் கொடுத்தமுத்தம்
என்னை கறைய வைத்தது...!

பின் பிரசவ அறையில்
நீ துடிப்பதை பார்த்து
செய்வதறியாமால்
உன்னருகில் இருக்கையில்...!

அழுகை சத்தத்துடன்
இரத்தத்தின் நடுவில்
இரத்தினம் ஒன்று கண்டவுடன்....!

உன்னை அணைத்தபோது
உன்கண்களில் வழித்த கண்ணீரோடு
என்கண்ணீர் சேர்ந்ததும்
எனக்கு
முத்தம் தான் கண்ணே...!

இன்று நமக்கிடையில்
பிள்ளை உறங்கும்போதும்

"நம் இதழ்கள் சேர்த்தது"

பிள்ளையின்
ஒருகன்னத்தில் நீயும்
மறுகன்னத்தில் நானும்
கொடுத்த முத்தத்தினால்....!

இது
காமத்தின் முத்தம் அல்ல...!

என்
காதலின் முத்தம்...!

எழுதியவர் : பா.பரத் குமார் (6-Sep-14, 12:26 pm)
Tanglish : en kathalin mutham
பார்வை : 906

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே