அந்நியனானேன்

என் தங்கை..
என்னை கருவாய் சுமந்த தாயின்
கருவில் பிறந்த தாயாய்..
தந்தையின் செல்லமாய் அவள்
அவளுக்கு செல்லமாய் நான்..
மிட்டாயில் தொடங்கிய சண்டை
சிட்டாய் பறந்து விட..
ஒரே தட்டில் உணவுண்டு
ஒரே மடியில் உறக்கம்
கொண்ட மழலை காலமது..
மழலை பொங்கும் மொழியாய்..
அண்ணா என்றாய் -ஏனோ
தகப்பனாய் உணர்ந்தேன் நான்..
இன்று ஒரு மழலையுடன்
நிற்கிறாய் அவலையாய் - தகப்பனாய்
அரவணைக்க வழியின்றி அந்நியனாக்கப்
பட்டேன் உன் அண்ணியால்...

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (7-Sep-14, 12:08 am)
பார்வை : 92

மேலே