கேரளா பால் பாயாசம் ஓணம் ஸ்பெஷல்

தேவையான பொருட்கள்: கேரளா பச்சரிசி - 1/2 கப் ஃபுல் க்ரீம் மில்க் - 1 லிட்டர் (4 கப்) தண்ணீர் - 1/2 கப் சர்க்கரை - 3/4 கப் ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
செய்முறை: முதலில் பச்சரிசியை நீரில் நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை குக்கரில் போட்டு, அத்துடன் 2 கப் பால் மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசிலானது போனதும் குக்கரை திறந்து, அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பின் மீதமுள்ள பாலை ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து தீயை குறைவாக வைத்து, 20 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், கேரளா பால் பாயாசம் ரெடி!!!