உன்னான்ட சரண்டர் ஆனேன் முனியம்மா

பல ஃபிகர பார்த்திருப்பேன்டி- ஆனா
என் டாவு- நீ மட்டும் தானடி !!
பள பள ன்னு சொக்காப்போட்டு
சோக்கா எவனும் வந்தாலும்
உனக்கேத்த சோக்காலி - நான் மட்டும் தானடி
ஜாடிக்கேத்த மூடி நீ மட்டும் தானடி !!
பாரதிக்கு ஒரு கண்ணம்மா,
இப் பரதேசிக்கேத்த முனிம்மா நீயடி !!
ட்விட்டர் ஐ.டி. எனக்கு இல்லடி
என் வூட்டு நெம்பர் பதினெட்டு தானடி
உள்ளே- எட்டி வச்சு நீயும் வாயேன்டி !!
ஃபேஸு புக்கும் நமக்கு வேணான்டி
பங்காளி பல பேரு வந்து போவான்டி !!
சாட்டிங்கின்னு ஆரம்பிப்பான்டி- படுபாவி
டேட்டிங்கில்ல போயி நிப்பான்டி !!
வாட்ஸ் ஆப்பும் போக வேண்டான்டி
ஆஆயா- ஆப்பக்கடை மட்டும் போதுன்டி !!
“பீட்சா ஹட்டு“ நமக்கு வேண்டான்டி
உடம்பெல்லாம் பீசு பீசா ஆகிப்போவுன்டி !!
பெசண்ட் நகரு பீச்சு போலான்டி
முக்குல முட்டை புரோட்டா வாங்கிதரேன்டி !!
மூக்கு முட்ட தின்னு வாயேன்டி-மறைஞ்சிருக்க
இடத்த மட்டும் தேட மாட்டேன்டி !!
குண்டுக் காலிப்பய எவன் வந்தாலும்-உனக்கு
ச்சோட்டா பீமா நானிருப்பேன்டி !!
பத்து பேரு ரவுண்டு கட்னாலும்
பென் டென் போல - நானும் சொலட்டீ அடிப்பேன்டி !!
“டூ” விட்டு நீ ஓடிப்போனாலும்
உன்ன தேடி நானும் வந்துருவேன்டி !!
வரிஞ்சி கட்டி உன்னாத்தா வந்தாலும்
உன்ன விட்டு மட்டும் போக மாட்டேன்டி !!
கைலி கட்டி உன்னப்பேன் வந்தாலும்
அப்பக்கூட - அப்பீட்டு - ஆக மாட்டேன்டி !!
உன் சொத்து சுகம்- புள்ளகுட்டி
எதுவும் வேணான்டி
உனக்கு மேல எதுவும்- எனக்கு
தேவை இல்லடி !!
என் மொத்தமும் நீ மட்டும் தானடி
முனிம்மா !
நீ கூட மட்டும் இருந்தாலே அதுவே போதுன்டி !!
முனிம்மா !
நீ கூட மட்டும் இருந்தாலே அதுவே போதுன்டி !!