வசந்தம்

நீ இல்லாத..எங்கள் ஊர்
திருவிழா.. இனிப்பதில்லை ..!
அதனால்..
அம்மன் சப்பரம் தூக்கி நான் வருவதில்லை..!
தூக்கினாலும் .
அம்மனின் பாரம் சற்றும் தெரிவதில்லை.. !
ஏனென்றால்
தோளில் நான் சுமப்பது அம்மனில்லை ..!
எனது
இதயத்தில் உனையன்றி யாருமில்லை..!
நீ வரும் தூரம்
அப்படி ஒன்றும் பெரிதில்லை..!
இருந்தும் நீ
எனைக் காண வருவதில்லை..
ஏனென்ற காரணம் எனக்குப் புரிவதில்லை..!
தானென்ற ஆணவமும் உனக்கில்லை..
ஆனாலும் தயக்கம் ஏன் .. தெரியவில்லை..!
இனி..
நீயின்றி.. என் வாழ்வில்.. வசந்தமில்லை..!