சுவரை விற்றுச் சித்திரமா

(கணிணி தேவதைகளுக்கு ஒரு கவன ஈர்ப்புக் கவிதை)
பட்டங்கள் ஆளவும்
சட்டங்கள் செய்யவும்
பூமிக்கு வந்த
புதுமைப் பெண்களே..!
அடுக்களை விலங்கினை
காலிலிருந்து கழற்றி விட்டு
அலுவலக விலங்கினை
கழுத்தில் மாட்டியிருப்பதை
நீ அறிவாயா ?
அன்றும் சரி...
இன்றும் சரி...
ஆணுக்கு உத்தியோகம் ஒன்றுதான்
புருசலட்சணம்...!
ஆனால் உத்தியோகம் மட்டுமல்ல...
உன் லட்சணம்...!
மாற்றாந்தாயிடம் விட்டு விட்டாய்
உன் மழலையை...
கணவனுக்கும் காட்டுவதில்லை
உன் கருணையை...
பெற்றோரும் கூட
உனக்கு மற்றவர்களாகினரோ...?
இல்லறத்தை நல்லறமாக்கும்
மகிமையை மறந்தே விட்டாயா...?
நடுநிசியில் உன் உறக்கம்...!
நண்பகலில் உன் விடியல்...!
ஏனிந்த அவலம்? எதற்கிந்த மயக்கம்.?
இல்லத்தை மறந்த இயக்கம்...!
கணிணிக்குப் பின்னுறங்கி
முன் எழும் கனவுப் பெண்களே...!
எட்டும் அறிவினில்
ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை...
என்று நிரூபித்தது போதும்...!
வசதியை தேட நினைத்து
வாழ்க்கையை தொலைத்து விடாதே...!
சுவரை விற்றுச் சித்திரம் வாங்கிடாதே...!

எழுதியவர் : ச.ஜெயக்குமாரி (11-Sep-14, 4:13 pm)
பார்வை : 116

மேலே