புதிய இலக்கு உனக்கு வேண்டும்
போன பாதையிலே சென்று நீ
காண போவதென்ன நண்பா
பழைய வாழ்வு அது போதும் இனி
புதிய இலக்கு உனக்கு வேண்டும்!
நிலவை அண்ணாந்து பார்த்தே
பெரும் மூச்சை விட்ட அந்த மனிதன்
நிலவிலே காலடி பதித்தான் - அதை
கனவிலும் நினைத்திருப்பானோ !
பறவை பறப்பதை பார்த்தே
பரிதவித்த காலம் மாறி
அப்பறவையை தண்டி சென்றே
வானத்தில் உலவுகின்றானே!
ஞாலத்தில் மனிதன் நினைத்தால்
முடியாததொன்றில்லை நண்பா!
விடியாத வாழ்வொன்றும் இல்லை!
விளங்காத புதிரோன்றும் இல்லை!
புதிய மனமதுவும் வேண்டும்!
தினம் புதிதாய் பிறத்தல் வேண்டும்!
புதிய இலக்கு ஒன்று வேண்டும்!
உன்னை வீழ்த்த முடியாது யாரும்!