காது கேட்பதேயில்லை

ராமு: எனது மனைவிக்கு கொஞ்சநாளாக காது கேட்பதேயில்லை. நான் என்ன சொன்னாலும் பதிலே சொல்வதில்லை. டாக்டர்: அதை சோதித்து பார்த்துவிடுங்கள். எவ்வளவு தூரத்தில் இருந்து பேசினால் காது கேட்கிறது என்பதை சோதித்து பார்த்து என்னிடம் வந்து சொல்லுங்கள். மருத்துவமனையில் இருந்து கிளம்பிய ராமு தனது வீட்டுக்கு வருகிறார். மனைவி சமையலறையில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, டாக்டர் சொன்னதை சோதித்து பார்க்க இதுதான் நல்ல நேரம் என்று முடிவு செய்கிறார். 10 அடி தொலைவில் நின்றுகொண்டு "சமையலறையில் என்ன செய்கிறாய்" என்று ராமு கேட்கிறார். பதில் வரவில்லை. 5 அடி முன்னே சென்று அதே கேள்வியை கேட்டபோதும் பதில் கிடைக்கவில்லை. மனைவியின் மிக அருகே சென்று நின்றுகொண்டு, மீண்டும் அதே கேள்வி. "சிக்கன் சமைக்கிறேன்ங்க.. இத்தோடு மூனாவது முறை சொல்லியாச்சு" என்று சலித்துக் கொண்டாராம் ராமுவின் மனைவி.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (12-Sep-14, 5:37 pm)
பார்வை : 294

சிறந்த நகைச்சுவைகள்

மேலே