இல்லாமத்தான் போகிறது

முடித்துவிட எண்ணி
முழு மனதோட
பேப்பர் பேனாவென
அத்தனையும் எடுத்து
அமர்ந்தபோது

வயதாகிப் போனதாலோ
பாடுப் பொருளொன்று
பச்ச புள்ளயாட்டம்
பக்கம் வர மறுத்து
பாடாய் படுத்தையில

சிதறும் எண்ணத்தால்
சில பொழுதுகளில்
எழுகின்ற உணர்வுக்கும்
விழுகின்ற வார்த்தைக்கும்
நேசம் இல்லாததால்

வடித்த கவிதையோ
வானவில் போல்
வண்ணக் காட்சி தந்தும்
எட்டாமலும் ஒட்டாமலும்
இல்லாமத்தான் போகிறது.

எழுதியவர் : கோ.கணபதி (13-Sep-14, 8:20 am)
பார்வை : 57

சிறந்த கவிதைகள்

மேலே