வாத்துக்கள் சென்ரியு

மருத்துவ பயிற்சி முகாமுக்கு சென்று
இலவச பரிசோதனைச் செய்துக் கொண்டன
வயது முதிர்ந்த வாத்துக்கள்.
*
வீடு காலி செய்தபோது
கிடைத்தது பாட்டியின்
பாக்கு இடிக்கும் உரல்.
*
போக்குவரத்து மாற்றம்
திணறி தவிக்கின்றன
தெரு மாடுகள்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (14-Sep-14, 11:42 am)
பார்வை : 94

மேலே