என்னோடு நீ-4

கண்களில் விழுந்து
கண்ணீரில் குளிக்கும்
சிறுதூசியா நீ...!

கூந்தல் காட்டில்
பாதையாய் மாறிபோன
வகிடா நீ...!

உனது எண்ணங்களின்
கிறுக்கல்களாய் பதிந்துபோன
கைரேகையா நீ...!

சிறுசத்தத்திலும் பெரிய
எரிச்சலடைய வைக்கும்
தலைவலியா நீ...!

இருக்கமாய் ஒற்றைவிரலை
பிடித்துகுழந்தையாய் விடமறுக்கும்
மோதிரமா நீ...!

என்கண்ணீரின் மிச்சம்போலவே
வெளிவரதுடிக்கும் பற்களினிடையேயுள்ள
உணவுதுகளா நீ...!

உன்பெயரை சொல்லிசொல்லியே
நரம்புகளையும் அதிரவைக்கும்
இதயதுடிப்பா நீ...!

காதோரம் படர்ந்தகருநிற
கொடியாய் சுருண்டுகிடக்கும்
முடியா நீ...!

புருவமலைகளினிடையே உதித்தசிறு
சூரியபுள்ளியென பிரகாசிக்கும்
குங்குமபொட்டா நீ...!

சூடிய மலரும்
கூந்தலும் சண்டைபோடும்
சிக்கலா நீ...!

எழுதியவர் : மணிமேகலை (14-Sep-14, 8:26 pm)
பார்வை : 389

மேலே